Karuppu Kavuni Noodles
Steps
- Boil 1 liter of water with 1 spoon of oil and 1/2 spoon of salt in a vessel.
- Once the water boils, add 200 grams of karupu kavuni noodles
- The noodles should be 90% cooked. Once it is boiled, transfer it to a colander and drain the water completely and keep it in a plate.
- Cut carrots, beans, green peas, capsicum and onions.
- Pour two table spoons of peanut oil in a wide pan.
- Add onions and green chillies to the oil and stir.
- When the onions are half cooked, add the chopped vegetables and stir.
- Once the vegetables are cooked, add the spices from the packet. After adding the spices and stirring well, add the drained karuppu kavuni noodles. The noodles should be mixed well.
- After mixing, finely chop the coriander leaves and add, mix and serve hot. Delicious karuppu kavuni noodles are ready.
Translations
தமிழ்
- ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் கூடவே 1 ஸ்பூன் எண்ணெய் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- தண்ணீர் கொதித்தவுடன் 200 கிராம் அளவுடைய கருப்பு கவுனி நூடுல்ஸ் சேர்க்க அவேண்டும்
- நூடுல்ஸ் 90% வேக வேண்டும். வெந்தவுடன் நீர் வடிக்கும் பாத்திரத்தில் மாற்றி நீரை முழுதும் வடித்து ஒரு தட்டில் எடுத்த்து வைக்க வேண்டும்.
- கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, குடை மிளகாய், வெங்காயம் தேவைக்கேற்ப காய்கறிகளை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் காய்ந்த உடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளற வேண்டும்.
- வெங்காயம் பாதி அளவு வெந்ததும் அரிந்து வைத்த காய்கறிகளை சேர்த்து கிளற வேண்டும்.
- காய்கறி வெந்ததும், பாக்கெட்டில் உள்ள மசாலா சேர்க்க வேண்டும். மசாலா சேர்த்து நன்கு கிளறிய பிறகு, வடிகட்டி வைத்த கருப்பு கவுனி நூடுல்ஸை சேர்க்க வேண்டும். நூடுல்ஸ் நன்றாக ஓன்று சேர கலந்து விட வேண்டும்.
- கலந்த பிறகு கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கடைசியாக சேர்த்து கலந்து சூடாக பரிமாற வேண்டும். சுவையான கருப்பு கவுனி நூடுல்ஸ் தயார்.