Mapillai Samba Sambar Sadham
Ingredients
- Mappillai Samba Rice - 200 gms
- Toor dal - 100 gms
- Onion – 1 (large)
- Tomato – 1 (big)
- Carrots, beans, drumsticks, yams
- Sambar powder - - 2 tbsp
- Tamarind
- Peanut oil
- Mustard
- Salt as required
- Ghee - 2 tbsp
Steps
- Wash the mapillai samba rice well and soak it for 6 hours
- In a cooker, add soaked rice and toor dal, add 4 cups of water to 1 cup of rice and cook till 8 whistles.
- Pour 2 tbsp of oil in a pan and add mustard when the oil heats up.
- Once the mustard is fried, add curry leaves and onion.
- Once onions are sauteed well, add tomatoes. A little salt should be added while adding tomatoes. Adding salt will cook the tomatoes faster.
- Once the tomatoes are cooked, add the chopped vegetables and saute. Then add two tablespoons of sambar powder and one cup of water and mix well. Add salt to the vegetable.
- Once the vegetables are cooked, add the tamarind water.
- Once the gravy boils well, add the boiled rice dal mixture to it
- Mix well and add two teaspoons of ghee and finely chopped coriander leaves. Hot and delicious mappillai sambar rice is ready.
Translations
தமிழ்
தேவையான பொருட்கள்
- மாப்பிள்ளை சம்பா அரிசி - 200 கிராம்
- துவரம் பருப்பு - 100 கிராம்
- வெங்காயம் - 1 (பெரியது)
- தக்காளி - 1 (பெரியது)
- கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உருளை கிழங்கு
- சாம்பார் பொடி - 2 மேஜை கரண்டி
- புளி
- கடலை எண்ணெய்
- கடுகு
- தேவையான அளவு உப்பு
- நெய் - 2 மேஜை கரண்டி
செய்முறை
- மாப்பிள்ளை சம்பா அரிசியை நன்றாக கழுவி, 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- ஒரு குக்கரில், ஊறிய அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து, ஒரு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 8 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்
- ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்க வேண்டும்
- கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்க்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்க்க வேண்டும். தக்காளி சேர்க்கும்போது சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். உப்பு சேர்ப்பதனால் தக்காளி விரைவில் வேகும்.
- தக்காளி குழைந்தவுடன், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இரண்டு தேக்கரண்டி சாம்பார் போடி சேர்த்தது ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விட அவேண்டும். காய்கறிக்கு தேவையான உப்பு சேர்க்க வேண்டும்.
- காய்கறி வெந்தவுடன் ஊற வைத்த புளிக்கரைசல் சேர்க்க வேண்டும்.
- குழம்பு நன்கு கொதித்தவுடன், வேக வைத்த அரிசி பருப்பு கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும்
- நன்றாக கலந்து பிறகு இரண்டு தேக்கரண்டி நெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி சூடாக பரிமாற, சுவையான மாப்பிள்ளை சாம்பார் சாதம் தயார்.